Tuesday, December 25, 2007

வெற்றி பெற்றவன் நிமிர்ந்து விடதோல்வியுற்றவன் பொறாமை கொள்கின்றான்
தோல்வியுற்றவன் நிமிர்ந்துவிடவெற்றி
பெற்றவன் தட்டிக்கொடுக்கின்றான் .

கொடுத்ததை நினைப்பதை விட
பெற்றதை நினைப்பது சிறந்தது

இறைவன் இருக்கும் இடமேதுன்பங்களையும் துயரங்களையும்மறக்கச்செய்யும் இடம்

Monday, December 17, 2007

எதிர்பாராதே அதிகமாய் கொடு.
கேட்டதை நம்பாதே பார்த்ததை நம்பு



இருப்பதை செலவு செய்யாதே
முதியோரானபின் உன்னை காப்பற்ற உதவும்.

காதல் சொன்னால் உடனே நம்பி
பின் அவஸ்த்தைபடாதே.

பிறரின் இலட்சியக் கனவுகளை கண்டு
ஏலனம் செய்யாதே..
முடிந்தால் உதவியாய் இருந்துவிடு

சிந்திப்பதை நல்லதாக சிந்தித்து
விடுவார்த்தைகளை அளவாக பேசிவிடு

இழந்ததை மறந்து விடு ஆனால்
அதில் ஏற்பட்ட பாடத்தை மறக்காதே

உன்னை நீ..மதிக்கத்தொடங்கு
அப்போதுதான் நீ..உயர்வாய்.

மனதில் பட்டதை சொல்லிவிடு
இல்லாவிடில் நீ.சொல்ல வந்ததை
மற்றவர் சொல்லும் போதுகை
கட்டி நின்று கேட்கநேரிடும்.

Saturday, November 17, 2007

சிந்தனை துளிகள்

சிந்தனை துளிகள்

சில்லறையாய் வாழ்வதை விட
சிற்பமாய் வாழ்வதே சிறந்தது.

ஆசைகளை எதிர்நோக்கி செல்வதால்
நம்மை நாம் இழந்து விடுகின்றோம்.

போதும் என்றே வாழ்ந்தால்
என்றும் ஆரோக்கிமாய் வாழமுடியும்.

மதத்தை விட மனதை கண்டு
கொள்ளமுயற்சி செய்தால்
பிரிவினை என்பது கிடையாது.
சிந்தனை துளிகள்
-----------------------------

பொது அறிவு மடமையானது
ஓழுங்கற்ற அறிவு உபயேகாம் இல்லாதது.

வாழ்க்கையில் பிரியமான நண்பர்களை
சந்தித்து கிடைத்த அன்பை விட
தாயின் விவரிக்முடியாத
அன்பை யாரலும் பெற்று தரமுடியாது

பொறுமை கசக்கத்தான் செய்யும்
ஆனால் அதுவே வெற்றியின் சின்னம்.

கொள்கையில் மாற்றம் ஏற்பட்டாலும்
உண்மைகளை கண்டு வாழ்த்தவேண்டும்