Friday, February 17, 2006

பாருங்கள்..சிந்தியுங்கள்

எனக்குப் பிடித்த பழைய பாடல்களை எனது கவிதைகளுடன் கேட்க கீழ்வரும் இணைப்புகளை அழுத்துங்கள்... [NEW]

என்றும் இனியவை-1

என்றும் இனியவை-2

இசையும் கதை கவிதைகள் சிறுகதை என் குரலில் கேட்க இங்கே.அழுத்தவும்

http://clearblogs.com/piriyaa/
பாருங்கள்..சிந்தியுங்கள்



நட்புக்கு அழகு முக்கியம் அல்ல
நல்ல மனது முக்கியம்.

மனம் விட்டு பேசுங்கள்
நீங்கள் எப்படிப்பட்டவர்கள்
என்று புரிந்து கொள்வார்கள்.

சொல்ல வேண்டியதை சொல்லுங்கள்
வேண்டாத விடயத்தை சொல்லாதீர்கள்.

உங்கள் மீது நம்பிக்கையை உருவாக்குங்கள்
விலத்திச் செல்லும்படி நடக்காதீர்கள்.

நாம் நாமாக இருக்கும் வரை
நட்பை மகிழ்ச்சியாக தொடரலாம்.

உங்கள் விருப்பத்திற்கு நண்பனை..
மாற்ற முயற்சி செய்தால் நட்பில்
மாறுபாடு ஏற்படும்.


சந்தித்தவுடன் நண்பராக்கி கொள்ளாதீர்கள்
முதலில் அவர் நண்பர்கள் யார் எனத்..தெரிந்துகொள்ளுங்கள்.

ஒருவரின் உண்மையான சுபாவத்தை
அறிந்து கொள்ளபொறுமையும் நிதானமும் தேவை.

பெருமை கொண்டவன் தன்...
நிலை மறக்கின்றான் .

பொறாமை கொண்டவன்
நட்பை இழக்கின்றான்.

தோல்விகள் சந்திக்கும் போது அவற்ரை சாதகமான மன...
நிலையுடன் நோக்க வேண்டும்.

தவறுகளை திருத்துங்கள் இல்லை மற்றவரின்
ஆலோசனையை கேளுங்கள்
.

அன்புடன்.
ராகினி.

No comments: